‘எண்ணலைகள்’ பகுப்புக்கான தொகுப்பு

எண்ணலை 2

ஜூன் 29, 2008

மென்பொருள் அற்ற மென்பொருள் நிபுணர்கள்

மென்பொருள் நிபுணர்களில் பெருபாண்மையோர் (51% அல்ல 80% வரை) மென்பொருள் அற்ற மென்பொருள் நிபுணர்களே. நான் மென்பொருள் என்று குறிப்பிடுவது அவர்களது மூலையை.

பெருவாரியான மென்பொருள் நிபுணர்களிடத்தில், அவர்கள் நிபுணத்துவம் வாய்ந்த மொழிகளில் எளிய கேள்விகளைக் கேட்டும், மிக எளிய நிரல்களை எழுதச் சொல்லிக் கேட்டும் எந்த நிபுணரும் விடையளிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திய பிறகே இதை எழுதுகிறேன்.

மென்பொருள் நிபுணர்களை தேர்ந்தெடுக்கும் மென்பொருள் கம்பெனிகள், எதை அடிப்படையாக வைத்து தேர்ந்தெடுக்கிறார்களோ தெரியவில்லை. அவர்கள் எதிர்பார்க்கின்ற மென்திறமைகள், ஆங்கிலப் பேச்சாற்றல், குழு செயல்பாடு, ஆளுமை மற்றும் தீர்வுகாணும் ஆற்றல் நிச்சயமாக பொறியல் மாணவர்களைக்காட்டிலும் TV சீரியல்-சினிமா நடிகை-நடிகர்கள், தொகுப்பாளர்கள்,
குத்தாட்ட நடிகை-நடிகர்கள், மாடல்கள், உயர் தர விபச்சாரிகள் போன்றோர்க்கு மிகுதியாக இருக்கிறது. எனவே ஏதோவொரு மென்பொருள் கம்பெனி இவர்களை (பரிச்சார்த்தரமாக) தேர்ந்தெடுத்து சேர்த்துப்பாருங்கள் நிச்ச்யமாக அவர்களைக்காட்டிலும் பின்னூவார்கள்! மின்னூவார்கள்! மென்பொருள் எழுதுவார்கள்!

இந்த இடத்தில் Dr.C.K.Prahlad’s வார்த்தைகளைக் குறிப்பிட கடமைபட்டுள்ளேன்.
Dr.C.K.Prahlad, the management guru says, “When the first Microsoft ‘Windows’ came out, it was absolutely phenomenal. Some five people were involved in its creation. Thereafter, you by one after another and the changes are very marginal. Now they have 2500 Ph.D.s who have not created anything different. The same argument surfaces: once things are in place they are organised and crystallised!”.

அமைச்சர் இலஞ்சம் வாங்குவதை எப்படி மறைமுகமாக வீடியோ பதிவு செய்து ஒளிபரப்பினார்களோ, அது போல் மென்பொருள் நிபுணர்கள் என்று சொல்லிக்கொண்டு கொழுத்த சம்பளத்துடன் கொழுத்துத் திரியும் மூலைக் கொழுப்பற்ற நிபுணர்களையும் மறைமுகமாக அவர்களிடம் எளிய கேள்விகள் மற்றும் நிரல்களை  கேட்டும், எழுதச் சொல்லியும் அவர்களது அறியாமை நிலையை அப்படியே வீடியோ பதிவு செய்து ஒளிபரப்பிட எண்ணுகிறேன், விளைகிறேன். முடியவில்லை, ஏனென்றால் என் தம்பி, தங்கை, நண்பர், உறவினர் என்று நீயூரான்கள் அற்றவர்கள் மென்பொருள் நிபுணர்களாக உள்ளனர். என்ன செய்வது? கவிதை எழுதி மனதை சாந்தப்படுத்திக் கொள்ளவேண்டியது தான். அப்படி எழுதிய கவிதை தான் “எதனால்”

மென்பொருளற்ற மென்பொருள் நிபுணர்களே!
கண்ணாடி பார்க்காதீர்!
உங்கள் பிம்பமே உங்களைக் காரித்துப்பும்!

எண்ணலை 1

மே 10, 2008

நான் பிறந்த நாளிலிருந்து இப்பதிவை எழுதுகிற இன்றைய நாள் 10-May-2008 வரை 12797 நாட்க்களைக் கடந்து இருக்கிறேன். இந்நாட்கள் எல்லாம் அல்லது ஓரிரு நாட்கள் அர்த்தமுள்ள நாட்களா என்றால் இல்லை. ஏதோ
பிறந்துவிட்டேன், வளர்ந்துவிட்டேன் ஒரு செடியாக, மரமாக, விலங்காக. எப்பொழுது மனிதனாக வளர்வேனென்று தெரியவில்லை. நாட்களும் ஓடிக்கொண்டே இருக்கிறது.

சரி, ஒவ்வொரு நாட்களும் செல்கையில் நான் எப்படி சிந்திப்பது, நினைப்பது?. என் வாழ் நாளில் ஒரு நாள் குறைந்து விட்டது என்று வருத்தப்படுவதா அல்லது என் வாழ் நாளில் ஒரு நாள் கூடியுள்ளது என்று மனம் மகிழ்வதா?. தெரியவில்லை எனக்கு.

பிறந்த தேதி எனக்குத் தெரிவதால், கடந்த நாட்கள் என் வாழ் நாட்களின் எண்ணிக்கை கூடி வருகிறது என்று சொல்லலாமா?. இது நேர்மறைச் சிந்தனையா? அல்லது அறிவுப்பூர்வமான சிந்தனையா?.

இறந்த தேதி தெரியாததால், என் மரணம் அடுத்த வினாடியோ அல்லது எப்பொழுதோ தெரியாது அதனால் என் வாழ் நாட்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று சொல்லலாமா?. இது எதிர்மறைச் சிந்தனையா?
அல்லது அறிவுப்பூர்வமான சிந்தனையா?.