எண்ணலை 3
இன்று இந்தியாவை ஆட்டிப்படைக்கும் பேய் “ஊடகப் பேய்”. இந்த ஊடகப் பேய் ‘அன்னா ஹசாரே’ என்ற போலி
காந்திய வாதியை பிடித்துள்ளது. இந்தப் பேய் அன்னா ஹசாரேவை ஊழலை ஒழிக்கப் புறப்பட்ட விடிவெள்ளியாக
பொய் பிரச்சாரம் செய்கிறது. இதற்கு ஏமாந்து, அறிவிழந்து ஒரு பெருங்கூட்டம் போலியின் பின்னால் செல்கிறது.
அய்யோ! பாவம்.
வெளிநாட்டினர் நம் தேசத்தை ஒரு காலத்தில் பாம்பாட்டிகளின் தேசம் என்று சொன்னார்கள். ஆனால் தற்பொழுது தான் நம் தேசம் பாம்பாட்டிகளின் தேசமாக உள்ளது. ஆம் “ஊடகப் பேய்” என்ற பாம்பாட்டியின் தேசமாக உள்ளது. ஊழல் நம் நாட்டில் புரையோடிப் போய்விட்டது என்பது உண்மை தான். லோக்பால் ஒன்று மட்டும் ஊழலை ஒழித்துவிடாது.
நாட்டின் வளர்ச்சி, மனிதத் தேவைகளின் பூர்த்தி, தனி மனித ஒழுங்கு, கண்கானிப்பு அமைப்புகளின் சீறிய நேர்மையான
செயல்பாடு, பணப்பரிவர்த்தனை ஒழிப்பு (பணம் ஒழிப்பு) போன்றவைகள் வேண்டுமானால் ஊழலை பெருவாரியாக ஒழிக்கலாம்.
இதைத்தவிர ‘அன்னா ஹசாரே’ போன்றவர்கள் ஊடகப் பேயிற்கு கிடைத்த தீனியே! வேறொன்றுமில்லை.