எண்ணலை 1

By joviya

நான் பிறந்த நாளிலிருந்து இப்பதிவை எழுதுகிற இன்றைய நாள் 10-May-2008 வரை 12797 நாட்க்களைக் கடந்து இருக்கிறேன். இந்நாட்கள் எல்லாம் அல்லது ஓரிரு நாட்கள் அர்த்தமுள்ள நாட்களா என்றால் இல்லை. ஏதோ
பிறந்துவிட்டேன், வளர்ந்துவிட்டேன் ஒரு செடியாக, மரமாக, விலங்காக. எப்பொழுது மனிதனாக வளர்வேனென்று தெரியவில்லை. நாட்களும் ஓடிக்கொண்டே இருக்கிறது.

சரி, ஒவ்வொரு நாட்களும் செல்கையில் நான் எப்படி சிந்திப்பது, நினைப்பது?. என் வாழ் நாளில் ஒரு நாள் குறைந்து விட்டது என்று வருத்தப்படுவதா அல்லது என் வாழ் நாளில் ஒரு நாள் கூடியுள்ளது என்று மனம் மகிழ்வதா?. தெரியவில்லை எனக்கு.

பிறந்த தேதி எனக்குத் தெரிவதால், கடந்த நாட்கள் என் வாழ் நாட்களின் எண்ணிக்கை கூடி வருகிறது என்று சொல்லலாமா?. இது நேர்மறைச் சிந்தனையா? அல்லது அறிவுப்பூர்வமான சிந்தனையா?.

இறந்த தேதி தெரியாததால், என் மரணம் அடுத்த வினாடியோ அல்லது எப்பொழுதோ தெரியாது அதனால் என் வாழ் நாட்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று சொல்லலாமா?. இது எதிர்மறைச் சிந்தனையா?
அல்லது அறிவுப்பூர்வமான சிந்தனையா?.

மறுமொழி இடுக