ஆனந்த விகடனுக்கு - கண்டனம்

ஆனந்த விகடனில் வெளிவந்த கட்டுரையை கண்டித்து அதன் அலுவலகத்திற்கு நான் அனுப்பிய கண்டனக் கடிதம்

ஆசிரியர் ஆனந்த விகடன் அவர்களுக்கு ஜோ.தாமஸ் எழுதும் கண்டனக் கடிதம்.
ஆகஸ்ட் 1, 2007 -ல் வெளிவந்த ஆனந்த விகடனில், திரு.ஞாநி எழுதும் “ஓ பக்கங்கள்” 108 -வது கட்டுரையில்
கனவு-௩ என்ற பகுதியினை தாங்கள் படித்தோ அல்லது படிக்காமலோ வெளிட்டதற்கு எனது கண்டனத்தை
தெரிவித்துக்கொள்கிறேன்.

திரு.ஞாநி அவர்களை கண்டித்து என் கண்டன விளக்கக் கடிதத்தை தொடர்கிறேன்.

திரு.ஞாநி அவர்கள் முன்னாள் ஜனாதிபதி திரு.அப்துல்கலாம் அவர்களை “ஊழல், முறைகேடு, பணம் வாங்குவது,
சுருட்டுவது” போன்ற செயல்களைச் செய்தவரைப் போல் கட்டுரையை எழுதி உள்ளார் என்று சொல்வதைக்
காட்டிலும், அவர் அக்கட்டுரையில் “திரு.அப்துல்கலாம் ஊழல், முறைகேடு, பணம் வாங்குவது, சுருட்டுவது
செய்துள்ளார்” என்று அழுத்தம் திருத்தமாக பொருள்படும் விதத்தில் தான் கட்டுரையை எழுதியுள்ளார் என்று
சொன்னால் சரியாக இருக்கும்.

முதலில் அண்ணா பல்கலைக்கழகத்தின் அப்போதைய துணை வேந்தர் மற்றும் பொறுப்பு அதிகாரி ஆகியோர்,
திரு.அப்துல் கலாம் அவர்களுக்கு கடிதம் எழுதியிருக்க வேண்டும் எப்படி என்றால், “தாங்கள் ஜனாதிபதியாகி
விட்டதால், தாங்கள் வசித்த வீட்டை அண்ணா பல்கலைக்கழகத்திடம் இந்த தேதிக்குள் ஒப்படைக்க வேண்டுகிறோம்”
என்று கடிதம் எழுதியிருக்கவேண்டும். இது அண்ணா பல்கலைகழகத்தின் நிர்வாகிகள் செய்த ஞாநி சொல்வது போல்
ஊழல், முறைகேடு தானே ஒழிய திரு.அப்துல் கலாம் செய்தது அல்ல.

ஜனாதிபதியாக பதவி ஏற்ற ஐந்து ஆண்டு காலத்தில் எத்தனை துணை வேந்தர்கள் மற்றும் பொறுப்பு அதிகாரிகள்
பதவி வகித்தார்களோ அத்தனை பேரும் கடிதம் எழுதியிருக்க வேண்டும். அதன்பின் திரு.அப்துல் கலாம் அவர்கள்,
தங்களது பொருட்களை எடுக்கமாட்டேன் என்று சொல்லியிருந்தாலோ அல்லது அறிக்கை வெளியிட்டு இருந்தாலோ
ஞாநி சொல்வது போல் தவறல்ல ஆனால் மிகச்சிறிய தவறு என்று வேண்டுமானால் சொல்லலாம்.

திரு.ஞாநி அக்கட்டுரையில் எந்த இடத்திலும் அவர் கூறிய குற்றத்திற்கு காரணமான நபர்களை விட்டுவிட்டு
திரு.அப்துல் கலாம் அவர்களை “ஊழல், முறைகேடு, பணம் வாங்குவது, சுருட்டுவது” போன்ற செயல்களுக்குச் சமமான,
ஒப்பான செயலைச் செய்தவர் என்று குற்றம்சாட்டுகிறார்.

திரு.ஞாநி அவர்களே, திரு.அப்துல் கலாமை உங்களுக்கு ஏதோ ஒரு காரணத்தால் (அவரது அதிநவின ஏவுகணைகள்,
அணு குண்டுகள் நாட்டின் பாதுகாப்பிற்குத் தேவை என்ற கொள்கை) பிடிக்காது (?), என்பதனால் அவர் மீது படு
பயங்கரமான வார்த்தைகளைப் பிரயோகப்படுத்தி குற்றம் சாட்டுகிறீர்கள்.

திரு.ஞாநி அவர்களே, தாங்கள் ஞாநி என்று கனவு காணாதீர்கள். தங்களிடம் பேணாவும், பத்திரிக்கையும் இருப்பதால்
எதை வேண்டுமென்றாலும் எழுதலாம் என்று நினைகாதீர்கள், எழுதாதீர்கள்.

இந்திய தேசத்தின் இளந்தளிர்களை “கனவு காணுங்கள்! கனவு காணுங்கள்!” என்று சொல்லிச் சொல்லி விஞ்ஞானச்
சிறகுகளை முளைக்கச் செய்து வரும் உன்னத மனிதரை “கனவு” என்ற தலைப்பை வைத்தே கொச்சை படுத்துகிறீரே,

       நீங்கள் ஞாநியா அல்லது “—————-”

நீங்களே நிரப்பிக்கொள்ளுங்கள்.

தங்கள் வாசகன்,
ஜோ.தாமஸ்

 

ஒரு பதில் “ஆனந்த விகடனுக்கு - கண்டனம்” க்கு;

  1. vijaygopalswami சொல்வதென்னவென்றால்:

    ஞாநிக்கு இப்போது விளம்பர போதை தலையில் ஏறியிருக்கிறது. அந்த போதைக்கு கருனாநிதி என்றும் தெரியாது, அப்துல் கலாம் என்றும் தெரியாது.

    ஜனாதிபதி பதவி முடிவதற்குள் வெளிநாடுகளில் சிகிச்சை எடுத்துக்கொண்டவர்களை எல்லாம் ஞாநிக்கு ஞாபகம் வராது. ஜனாதிபதி ஆக்குங்கள் என்று அவராகவா வேண்டி வருந்தி பதவிக்கு வந்தார்? அப்படியே உள்நோக்கத்தோடு அவருக்கு பதவி வழங்கப்பட்டிருந்தாலும் அதில் அவருடைய தவறு என்ன இருக்கிறது? சாகிற வரைக்கும் வருணாசிரமத்தை கட்டியழுத பாரதிக்கு பாதந்தாங்குகிற ஞாநி போன்றவர்களிடம் இதைத்தான் எதிர்பார்க்க முடியும்.

    இப்போதெல்லாம் ஞாநி கட்டுரைகள் எழுதுவதில்லை. மற்றவர்களின் உள்நோக்கங்களை அலசி ஆராய்கிறேன் என்ற பெயரில் மலத்திலே புழு பொறுக்குகிற வேலையைத்தான் செய்து வருகிறார்.

    குமுதத்தையும் ஞாநியையும் கேள்விகேட்டு நாமெல்லாம் சலித்துப் போக வேண்டியதுதான்.

    //நீங்கள் ஞாநியா அல்லது “—————-”//

    கோடிட்ட இடத்துக்கு எந்த வார்த்தை பொருந்துமோ அதுதான் ஞாநி, அதிலென்ன உங்களுக்கு சந்தேகம்.

மறுமொழி இடுக