மீசையை பெண்ணாக பாவித்து எழுதப்பட்ட கவிதை.
மீசை
நான் அவன் காதலி,
பருவத்தில் பயிர் செய்ய வந்தவள்.
அவனில் ஹார்மோன் விளையாட்டு
விபரீதம் நான்.
அவனில் ஆண்மையின் வெளிச்சம் நான்.
அவன் விரும்பாவிட்டாலும்
அவனில் அரும்பிவிடுவேன்.
அரும்பின் குரும்புகள் உண்டு.
எரிச்சல் படாதே!
அவை எனது காதல் ஸ்பரிசம்.
எனது முத்தம் அவன் மேல் உதட்டோடு
கீழ் உதட்டோடு சேர்ந்து தர
ஆங்கிலப் படம் பார்த்ததில்லை.
முடி முளைத்த மச்சம் நான்,
தருவேன் ஆண்மை அதிர்ஸ்டம்.
நீ ஹிட்லர் (செக்ஸில்)
உனக்கு நானுமா ஹிட்லர்?
என்னை வளைப்பதால் என்ன பயன்?
வில்லை வளையுங்கள்,
சீதை கிடைப்பாள்.
என்கிட்ட ஏனிந்த முறைப்பும், முறுக்கலும்
மெல்லியாள் நான் வலியாளைத் தேடும்
காமத்தீயால் கருத்திருந்தேன்
ஓர் பாலுறவு நானறியேன்.
எனக்கு ஏன் கருத்தடை ஆப்ரேசன்.
கலைஞர் கண்ட உளியா நான்?
வைரமுத்துவின் குறுக்குச் சிறுத்தவள்.
கெடு நேரத்தில் ஏனிந்தத் தடவல்,
எனக்கு கூச்சமாயிருக்கு.
குருடர், செவிடர் பார்ப்பதில்லை!
நெட்டை, குட்டை பார்ப்பதில்லை!
நிறவெறி என்னில் இல்லை!
மதவெறியும் என்னில் இல்லை!
ஆடவரே,
சூதாட்டத்தில் வேண்டுமானால் பாஞ்சாலியை வையுங்கள்
என்னையும் வைப்பது முறையோ?
பாஞாலிக்கு துச்சாதனன் அவையில் கற்பு மிஞ்சியது.
உங்கள் அவையில் எங்ஙனம் நான் மிஞ்சுவது.
நான்,
ஐஸ்வர்யாவதும், டையானா ஹேடனாவதும்
உங்கள் கையில்
காயசண்டிகையாவதும், சூர்பணகையாவதும்
உங்கள் கையில்.
ஓர் வேண்டுகோள்:
என்னைப் பூலான்தேவியாக மாற்றிவிடாதீர்!
என் கையில் இருப்பது ஈட்டி தான்
பாவம் என் காதலர், குத்தப்போகிறது
காதல் கொடையாக கத்தரித்துவிடுங்கள்
என் கைகளைத்தான் சொல்கிறேன்.
நாட்டியம் நானறியேன்
காதல் சரசம் நான் புரிவேன்
“ஒருவனே” உன்னிடம் மட்டும் தான்.
ஆடவரே,
விரும்பியபடி தடவிக்கலாம்
மலை வாழைத்தொடையா எனது?
காலத்துக்கும் வெச்சுக்கலாம்
எனது அதிர்ஸ்டம் நினைவிருக்கா?
ரதிக்கு இச்சதி தெரியுமானால்
விதியென விட்டுவிடு,
என்னை ஒதுக்கிவிடு,
சொல்லிவிடு,
உன் கண்ணகி இருக்கும் வரை
நான் மாதவி தானே!
கண்ணகியே,
என்னால் உங்களில் இடைவெளியா?
உன் கோவலனிடம் கூறிவிடு
மாதவி நான் மாண்டுவிடுகிறேன்.
என்னவனே!
உன் கண்ணகி இறந்துவிட்டளா?
“மாதவி” என்னையும் ஒதுக்கிவிடுங்கள்
கண்ணகிக்கு எனது இதய அஞ்சலி.
பின்னாளில்,
கண்ணகி நினைவில்
“மாதவி” என்னை வைத்துக்கொள்ளுங்கள்.
வாழையடி வாழை நாங்கள்
எங்களில் மலடி யாருமிலர்
வெட்டினால் வளர்வோம்
அழித்தால் புதியதாய்ப் பிறப்போம்
இன்னும் வலுவோடு.
உங்கள் ஆண்மை உதிருமானால்
நாங்கள் பொறுப்பல்ல
மருத்தவரை நாடவும்.
நாங்கள் தருகிறோம்
வாழ்நாள் உத்திரவாதம்
எங்களால் வராது
உங்களுக்கு “எய்ட்ஸ்”
எங்களுக்கு சிசேரியன் நடந்தால்
காதலரே, டாக்டரிடம் கூறவும்
கத்தரியை ஸ்டேரலைஸ் (சுத்தம்) செய்ய
மறந்துவிடாதே இதற்கு முன்
கத்தரிக்கப்ப்ட்டவன் “எய்ட்ஸாலி”.
- ஜோவியா


