Tamil Poem 7

By joviya

பால்

கடந்தகாலம்:

ஆடையற்று நின்றிருந்தேன்
நிர்வாணக் கோலம் பூண்டிருந்தேன்
எனை நோக்கும் விழிகள் இல்லை!
எனைத் தீண்டிடும் விரல்கள் இல்லை!
காமப்பால் பருகிட இதழ்களும் இல்லை!

நிகழ்காலம்:

ஆடைகட்டி நிற்கிறேன்,
பொங்கிப் பூரித்து நிற்கிறேன்,
எனை நோக்கும் விழிகள் எத்தனையோ!?
எனைத் தீண்டிடும் விரல்கள் எத்தனையோ!?
காமப்பால் பருகிடத் திறக்கும் இதழ்கள் எத்தனையோ!?

எதிர்காலம்:

என் ஆடை அவிழ்கப்படப் போகிறது,
பொங்கி நின்ற பூரிப்பு அழியப் போகிறது,
வெண்மேனி வீனாகப் போகிறது,
ஓரிருநாள் வாழ்நாள் முடியப் போகிறது.

சரி,
நான் ஆண் பாலா?
இல்லை
நான் பெண் பாலா?

இக்கவியின் பதில்:
ஆவின் பால்.

- ஜோவியா

மறுமொழி இடுக