மையெழுதி
“பேனா”
யார் என்னை அழைப்பது?
“பேனா” என்றழைத்து ஆங்கிலத்தைக் குதறாதீர்
“பெண்” என்றே அழைத்துக் கொள்ளுங்கள்.
ஏன்?
நானும் அந்த நாட்களில்
ஆடையை ஈரமாக்குவதால்.
தமிழில் நான் “எழுதுகோல்”
பழமைகள் வைத்த பழைய பெயர்
நாகரீக நங்கை நான்
புனைந்துகொள்கிறேன் புனைப்பெயர் “மையெழுதி”.
பெயரிலெ மையல் இருப்பதால்
விரும்பியபடி காதல் செய்வீர்
எனை வைத்து எப்படியென முனங்காதீர்.
வள்ளுவன் எனைக் காதல் செய்யலையோ!
காம்த்துப் பால் படைக்கலையோ!
கலைஞரின் விரல் இடுக்கு வெப்பம்
என்னை இளமையாய் வைத்திருக்கிறது
நானும் அவரை இளைஞராகவே வெச்சிருக்கிறேன்
அவர் துணைவியார் மன்னிக்கவும்
வைரமுத்துவின் வைர வரிகள்
யாரும் அப்படிச் சொல்லாதீர்
வெட்கமாக இருக்கிறது
என் இடுப்பு மடிப்புகள் தான் அவை.
பெண்களிடத்தில் சிக்கிக் கொண்டால்
வெச்சுக்கிறது அவர்கள் வழக்கமில்லாததால்
வைபதற்குப் பதில் சொருகிக்கொள்கிறார்கள்
இடுப்பு இடுக்குச் சேலைக்குள்
என் தலை மட்டும் தப்பியதால்
பம்பராட்ட மைதனம் பார்க்கிறேன்
ஓர் கோணத்தில்
முக்கோணம் தெரிகிறது
பிதாகரஸ் தேற்றம் படிக்கிறேன்.
எல்லோரும் என்னை வெச்சுக்கலாம்
பால் பேதம் பார்ப்பதில்லை
கவிஞர்களிடம் உறவாடுகையில்
முன்விளையாட்டு உரசல்கள் ஏராளம்
கதாசிரியர்களிடம் உறவாடுகையில்
பாகவதர் படம் பார்த்த அனுபவம்
சீர்திருத்தவாதிகளிடம் உறவாடுகையில்
சீரழிந்த நான் சீராகுகிரேன்
அறிஞர்களிடம் உறவாடுகையில்
எனக்கே மூலை முளைத்துவிடுகிறது.
நான் முற்றிலும் இல்லாமால்
போகும் காலமும் தொலைவில் இல்லை
கணினி கண்கலங்க வைக்கிறது
அச்சும் அச்சமூட்டுகிறது
தொலை நகலும் தொல்லை தருகிறது
செல்பேசியிலும் செல்லச்சு வரலாம்
நான் செல்லாக் காசாகலாம்
கையொப்பமிடவாவது ஒப்புக்கொள்ளுங்கள்.
மென்பொருள் நிபுணர்களே
மென்பொருள் எழுதுகிறோமென்று சொல்லாதீர்!
எங்களை முட்டாள் ஆக்காதீர்!
டைப் அடிக்கிறோம், பொத்தான் அழுத்துகிறோம்
என்று வேண்டுமானால் சொல்லுங்கள்.
திருத்தப்பட்ட காலம் வரும்
“மையெழுதி” பிடிக்க கற்றும் தரும்.
ஆசிரியர்களை வெறுக்கிறேன்
விடைத்தாளில் இரத்தக் கீறல்கள் செய்வதால்
பொய் கையொப்பமிட்டவர்களே
தன் கையெழுத்தை தனதல்ல என்றவர்களே
பாரதி சொன்னது போல்
காரி உமிழ்கிறேன்.
மரண தண்டனை ரத்தாகும் வரை
கணம் நீதிபதிகளை புறக்கணிக்கிறேன்.
– ஜோவியா
9:41 மு.பகல் இல் செப்டம்பர் 24, 2007 |
I am not able to view the poems.. I thinkn there is some problem in font..
If u have time, see my poems at
http://sensoft2000-sentamil.blogspot.com/