Tamil Poem 5

By joviya

கரு

என் நாடு ஆண் பால் நாடு
அந்நாடோ பெண்பால் நாடு
இங்கு,
வேற்றுமைகள் பல உண்டு,
கொள்கை ஒற்றுமைகள் சில உண்டு
பழங்கால பண்டமாற்று முறையுண்டு
இக்கால பணமாற்றும் உண்டு

ஆண்பால் நாட்டின் படைகள் – வெண்படைகள்
நாட்டுப்பற்று உச்சமானால் துடிப்புடன் கிளர்ந்தெழுவர்
வெண்படைகளுக்கு வால் உண்டு
அடங்காமை இவர்கள் குணாதிசயம்.
பெண்பால் நாட்டின் படைகள் – செம்படைகள்
நாட்டுப்பற்று உச்சமானால் வெடித்து வெளிவருவர்
செம்படையினருக்கு வால் இல்லை, வால் (wall) உண்டு
அடக்கம் இவர்கள் குணாதிசயம்.

இருபால் நாடுகளும்
நேசக்கரங்களால் அரவணைப்பதும் உண்டு
பின் விட்டு விலகுவதும் உண்டு
சில நேரங்களில் சில மணித்துளிகள்
எல்லைகள் மறைவதும் நெருக்கம் இருக்கமாவதும்
இருக்கத்தான் இருக்கிறது.

வெளியுறவு முரண்பாடுகள் இங்கே தான் எழுகின்றன
நேச அரவணைப்பின் இருக்கமும் இங்கே
வெண்படைகளின் ஊடுருவலும் இங்கே
போர் முரசோ கொட்டவில்லை
இரத்தமோ சொட்டவில்லை
வியர்வைதான் இருபால் நாட்டின் மேற்பரப்பில்
முத்து முத்தாய் முத்துக்களாய்.

வெண்படையோ, செம்படையினூடே
வாலும் உண்டு, வாலும் ( wall ) உண்டு
மடிவது ஆயிரமோ, இலட்சமோ, கோடியோ
இறுதி விநாடி அமைதி நிலவியது
இருவர் தான் மிஞ்சியது
ஓர் வெண்படையின் வால் ஓர் செம்படையின் வாலில் ( wall ) ஊடுருவியது.
இருபடையின் நேசக்கைக் குலுக்கல்
விளைவு கவிதையின் தலைப்பு.
- ஜோவியா

மறுமொழி இடுக