Tamil Poem 4

By joviya

ஆதிப்பெண்ணின் ஒப்பாரி

எந்த அப்பனும்
இனிமேல் சொல்லாதீர்
“என் இரத்தம்” என்று
இந்த ஜெனிட்டிக் காலத்திலும்
“என் இரத்தம்” என்று
உணர்ச்சிவசப்படாதீர்

வைரமுத்து சொன்னது போல்
“என் காமக்கொழுப்பு” என்று
வேண்டுமானால் சொல்லுங்கள்
அல்லது
இந்த ஜோவியா சொல்வது போல்
காமம் கிண்டிய “சர்க்கரைப் பாகு” என்று
வேண்டுமானால் சொல்லுங்கள்
ஆனால்,
விஞ்ஞானம் சொல்கிறது,
உங்கள் இரத்தமும் வேண்டாம்
காமக் கொழுப்பும் வேண்டாம்
சர்க்கரைப் பாகும் வேண்டாம்
பெண்ணே! நீ மட்டும் போதும்

மதமே!
உங்கள் மதத்தை மாற்றிக்கொள்ளுங்கள்
மதமாற்ற தடைச் சட்டம் ரத்தாகிவிட்டது.
நான் தான் முதல்
ஆதி ஆணும் என்னை
வழிமொழிந்தவன் தான்
என்று என் ஒப்பாரி ஓய்வது
ஜெனிட்டிக் விஞ்ஞானியே!
உருவாக்கு,
ஆணற்ற ஆணை.

என் ஒப்பாரி ஓய்ந்தால்,
ஒப்பந்தம் செய்வோம் ஆண்களோடு
“ஆணை அடிமையாக்க மாட்டோமென்று”.
– ஜோவியா

மறுமொழி இடுக