சமூக விலங்கு
புணர்ந்தார்கள்.
எனக்காகவா?
விதைக்கபட்டேன்.
மதத்தில் நுழைக்கப்பட்டேன்.
முளைத்தேன்.
பூத்தேன்.
புணர்ந்தேன்.
இருமுறை காய்த்தேன்.
கனிந்தேன்.
உதிர்ந்தேன்.
எல்லாம் யாருக்காக?
எனக்காகவா?
பண்பட்ட சமுகத்தில்,
நான் ஒரு “சமுக விலங்கு”.
– ஜோவியா