ஜூன், 2007 க்கான தொகுப்பு

Tamil Poem 2

ஜூன் 29, 2007

இப்படியும் ஓர் விபச்சாரி

அவள் அழுக்கிபோனவளோ! இத்துப்போனவளோ!
அழுக்கிப்போயிருந்தால் போகட்டுமே!
இத்துப்போயிருந்தாலும் போகட்டுமே!
அவள் வாழ்வின் சுழல்கள் அவளை,
அந்தச் “சிவப்புவிளக்கு” விடுதிக்கு
காமுகர்கள் அவளது பூ உடலை
அங்கே பாருங்கள் கசக்கிய பூவாய் அவள்!
அவள் உள்ளத்தின் உண்மைகளை அறீவீரோ!
உள்ளப் போராட்டங்களைத்தான் அறீவீரோ!
உடல் தூய்மையைப் பார்க்கின்ற மனிதா,
அவள் உள்ளத் தூய்மையைப் பார்க்கின்றீரா!
வேதங்களின் பார்வையில்
அவள் கற்பற்றவள் தான்
எனது பார்வையில்
அவள் கற்புக்கரசியே!
அவள் பகிரங்கமாக அறிவிப்பாள் விபச்சாரியென்று
ஏனென்றால் அழுகிப்போனவள் உணர்கிறாள்.
இவள்கள் அறிவிப்பாள்களா சமுதாயப் போலிகளென்று?
மாட்டார்கள்,
ஏனென்றால் இவள்கள் வரட்டுக் கவுரவத்தில் வாழ்கிறவர்கள்.
அவள் சீதையைப் போல் தீயில் குதித்திருக்கலாம்
அவளால் முடியவில்லை, ஏன்?
தீயில் எரிவது அவள் உடல் மட்டுமா?
இல்லை! இல்லை!
அவளது மாசற்ற இதயமும் தானே.
அவளறிந்த அவள் இதயத்தை அவளால்
தீயீல் கொன்றிட இதயமில்லை.
அன்று சீதை குதித்த “தீ” வேறு,
இன்றைய “தீ” வேறு
இன்றைய தீயில்
அவளும் எரிவாள், இவள்களும் எரிவாள்கள்.
ஓ மனிதா!
மூலையில் மூளையைச் செப்பனிடு
நீ மட்டும் முயன்றால்
அவளையும் “குத்து விளக்கு” விடுதிக்கு.
- ஜோவியா

Tamil Poem 1

ஜூன் 27, 2007

மழை

மேகம் என்பது அவள் பெயர்
கருத்த நிறைமாத கர்ப்பிணி
தென்றல் மேகத்தின் மருத்துவச்சி
தென்றல் நட என்கிறாள்
மேகம் நடக்கிறாள்
தென்றல் ஓடு என்கிறாள்
மேகம் ஓடுகிறாள்
இவை எளிய பிரசவத்திற்கு பயிற்சி
இதனால் இல்லை மேகத்திற்கு அயர்ச்சி.

ஆணோ பெண்ணோ
அதுவே தாய்மையின் சுகம்
இதுவே மேகத்தின் அகம்
இன்றோ நாளையோ
சில விநாடிகள் தான் மிச்சமோ
இது தென்றலின் நாட்கொடுப்பு.

நேரம் தேதி நெருங்கிவிட்டது
தென்றல் பரபரத்தது
அமைதி நிலவியது அடுத்த விநாடியே
மேகத்திற்கு பிரசவ வலி.

அலறினாள் இடியாக
அழகிய சிசுவின் ஜனனம்
எங்கும் சிசுவின் சினுங்கள் துளிகள்
“மழை” என்று பெயரிட்டாள் மேகம்.